search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால அவகாசம் நீடிப்பு"

    ஜி.எஸ்.டி.ஆர்-9, ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகியவற்றுக்கான கணக்குகளை அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #AnnualReturn #Extended
    சென்னை:

    ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை கமிஷனர் ஜி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி.ஆர்-9, ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகியவற்றுக்கான கணக்குகளை அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம். வரிசெலுத்துவோர் இந்தத் தேதிக்கு முன்னதாக கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும்.

    வரிசெலுத்துவோர் வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்வதற்கு உதவிட சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை முன்வந்துள்ளது. ஜி.எஸ்.டி. இணைய பக்கத்தில் படிவம் கிடைக்கப்பெற்றவுடன் வருடாந்தர கணக்கு தாக்கல் செய்வது குறித்து நேரடி செயல்விளக்கம் தர திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் தலைமையக அலுவலகத்தில் நேராகவோ, அல்லது 044-26142850/51/52 அல்லது 044-26142853 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது sevakendraoutertn@gov.in என்ற இணையதளம் மூலமாகவோ சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GST #AnnualReturn #Extended 
    கஜா புயல் காரணமாக, வரும் 30-ந் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணத்தை கட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மின்துறை அறிவித்துள்ளது. #GajaCyclone
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட மின்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

    கஜா புயல் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர், மின்துறை அறிவித்த கடைசி தேதிக்குள் கட்டணத்தை கட்டமுடியாமல் போய் இருக்கலாம். புதுவை அரசின் உத்தரவிற்கு இணங்க, வருகிற 30-ந் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணத்தை கட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaCyclone

    ×